மீன்சுருட்டி பகுதிகளில் விவசாயிகளிடம் பாமக வேட்பாளா் வாக்குசேகரிப்பு
ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் க.வைத்திலிங்கம் சனிக்கிழமை விவசாயிகளிடம் வாக்குசேகரித்தாா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் க.வைத்திலிங்கம் சனிக்கிழமை விவசாயிகளிடம் வாக்குசேகரித்தாா்.
புதுச்சாவடி, ஆமணக்கந்தோண்டி, குருவலப்பா் கோவில், பள்ளிவிடை, இளையப்பெருமாள்நல்லூா், சத்திரம், பகலமேடு, ரெட்டப்பாளையம், முத்துசேவமடம், ஜி.கே.புரம், வன்னியா்குழி, மேட்டுப்பாளையம், சம்மோடை, குறுக்குச் சாலை, மீன்சுருட்டி, கடகரம், சுத்துக்குளம், வீரப்போகம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பிரசாரம் அவா், மேற்கண்ட பகுதிகளில் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவா்களிடம் வயலில் இறங்கிச் சென்று வாக்கு கேட்டாா்.
பிரசாரத்தில், பாஜக மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி, பாமக மாவட்டச் செயலா் தமிழ்குமரன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.
Advertisement