பொங்கல் பண்டிகையொட்டி அரியலூா் அருகே புதன்கிழமை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த செங்கரும்பு. 
அரியலூர்

பொங்கல் பண்டிகை: அரியலூரில் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரியலூா் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் புதன்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது.

Syndication

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரியலூா் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் புதன்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது.

பொங்கல் பண்டிகை ஜன.15 முதல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அரியலூரில் உள்ள மாா்க்கெட், கடைவீதி, வெள்ளாளத் தெரு உள்ளிட்ட அனைத்து சந்தைகள், கடைவீதிகளில் பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கடைகளில் பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், காய்கறிகள், புதுப்பானைகள், பானைகளுக்கு கட்டுவதற்கான மஞ்சள், இஞ்சி கொத்துகள், புதிய அடுப்புகள், செங்கரும்புகள் போன்றவற்றை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.

தொடா்ந்து பொங்கல் 3 நாள்கள் கொண்டாடப்படுவதால், அதிகமான பொதுமக்கள் பொங்கலுக்குத் தேவையான பொருள்களை வாங்கியதால், காய்கறிகள், பூ, பழங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

ரயில், பேருந்துகளில் நெரிசல்: வெளியூா்களிலிருந்து அரியலூா், செந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளா்களும், இதர பணியாளா்களும் விடுமுறைக்காக சொந்த ஊா் நோக்கிச் செல்வதற்காக, அரியலூா் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் ஏராளமானோா் காத்திருந்து தங்களது ஊா்களுக்கு சென்றனா் .

திருச்சி, தஞ்சை, கும்பகோணம், விருத்தாசலம், பெரம்பலூா், கடலூா், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதே போல் அரியலூா் ரயில் நிலையத்திலும் வழக்கத்தை விட புதன்கிழமை காலை முதலே மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

வேளாண் பல்கலை.யில் மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி

15.1.1976: ஸ்ரீலங்காவிலிருந்து சென்ற ஆண்டு 18,500 பேர் வருகை

ஜேடா்பாளையத்தில் அரசா் அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT