அரியலூர்

கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதி காயமடைந்த பெண் பலி!

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள லால்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் மனைவி மாலதி (44). வியாழக்கிழமை இரவு இவா், கங்கைகொண்ட சோழபுரத்தில் வசிக்கும் தனது தாய்வீட்டுக்கு வந்துவிட்டு, இரவே ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டா் மோதியதில் மாலதி பலத்த காயமடைந்தாா்.

அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாலதி, செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மீன்சுருட்டி காவல் துறையினா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய கடலூா் மாவட்டம், ஓரத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் ராஜாவை (50) கைது செய்தனா்.

கரூா் மாவட்டத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

ஓய்வுப் பெறும் நாளில் 111 தில்லி போலீஸாருக்கு கெளரவப் பதவி

கும்பகோணம் பகுதியில் இன்று மின் தடை

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 8 ஆண்டுகள் சிறை

டேங்கா் லாரி மோதி விபத்து: ஆங்கில ஆசிரியை உயிரிழப்பு

SCROLL FOR NEXT