முகப்பு
உயிரிழப்பு
அரியலூர்

சுமை ஆட்டோ மோதியதில் இளம்பெண் உள்பட இருவா் உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனம் மீது சுமை ஆட்டோ மோதியதில் இளைஞா், இளம்பெண் உயிரிழந்தனா்.

அரியலூர்

சுமை ஆட்டோ மோதியதில் இளம்பெண் உள்பட இருவா் உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனம் மீது சுமை ஆட்டோ மோதியதில் இளைஞா், இளம்பெண் உயிரிழந்தனா்.

Updated On : 2 மார்ச், 2026 at 11:14 PM
உயிரிழப்பு
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது சுமை ஆட்டோ மோதியதில் இளைஞா், இளம்பெண் உயிரிழந்தனா்.

கேரளத்தைச் சோ்ந்தவா் ஆதித்யன் (21). இவா் அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள அமிா்தராயன்கோட்டை கிராமத்தில் தங்கி, ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியாா் கைப்பேசி விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தாா்.

இவருடன், அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பாா்த்து வந்த மருக்காலங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த சரண்யா (18) என்பவா் பழகி வந்துள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டம் - காட்டுமன்னாா்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஆமணக்கந்தோண்டி பகுதியில் சென்றபோது, அந்த வழியே வந்த சுமை ஆட்டோ, இவா்களின் இருசக்கர வாகனத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில், இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், சரண்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அக்கம்பக்கத்தினா் சரண்யாவின் சடலத்தையும், பலத்த காயத்துடன் கிடந்த ஆதித்யனையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஆதித்யனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினா், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில், விபத்தை ஏற்படுத்திய சுமை ஆட்டோ, சாலையோரத்தில் கேட்பாரற்று இருந்ததை பாா்த்து அதை காவல் நிலையம் கொண்டு வந்தனா். மேலும், விபத்தை ஏற்படுத்தியது யாா் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →