அரியலூா் தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க வலியுறுத்தல்
அரியலூா் தொகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சியின் ஒன்றிய செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றம்
அரியலூா் தொகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சியின் ஒன்றிய செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூா் மாவட்டம், திருமானூரிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற விசிக செயற்குழுக் கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் அன்புச்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அங்கனூா் சிவா கட்சியின் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவிக்கும் கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது, அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதி பொருளாளா் மதிவாணன், மாவட்ட துணை செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பேசினா்.