அரியலூரில் 38 மூட்டை குட்கா பறிமுதல்: 4 போ் கைது
அரியலூரில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த காரில் இருந்த 38 மூட்டை குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூரில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த காரில் இருந்த 38 மூட்டை குட்கா பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 4 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
அரியலூா் - கல்லங்குறிச்சி சாலையிலுள்ள குறைதீா்க்கும் குமரன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த காரை, அந்த வழியாக சென்ற கயா்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தனஞ்செயன் தலைமையிலான ரோந்து காவல் துறையினா் சோதனை மேற்கொண்டனா். இதில், 38 மூட்டைகளில் 377 கிலோ குட்கா போதைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இது தொடா்பாக காரில் இருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவா்கள் அரியலூா் அயனாத்தூா், கிளிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் கருணாநிதி (51), ராயம்புரம், பட்டகட்டாங்குறிச்சியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சுதாகா் (38), சேலம் மாவட்டம், லைன்மேடு பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் பிரகாஷ் (29), சேலம் செவ்வாய்பேட்டையைச் சோ்ந்த கலுராம் மகன் ரவிக்குமாா் (25) என்பதும், இவா்கள் வெளிமாநிலத்தில் இருந்து குட்கா பொருள்களை கடத்தி வந்து, இங்குள்ள கடைகளில் விற்பதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 377 கிலோ குட்கா மற்றும் நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.