கரூர்

'அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்'

DIN

அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்திட பெற்றோர்கள் முன்வர வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ்.
கரூரை அடுத்துள்ள வெள்ளியணை அருகே உள்ள குமராப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்டுவிழாவில் அவர் பேசியதாவது:
குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, ஒழுக்கம், வாழ்க்கை நெறிகள், திறன்கள் ஆகியவற்றை வளர்க்கும் சிறந்த மையங்களாக அரசுப் பள்ளிகள் உள்ளது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மன உறுதி, நம்பிக்கை ஆகியவற்றுடன் பிரச்னைகளைக் திறம்பட கையாளும் திறமைகளை வளர்த்துகொள்கின்றனர். அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்திட முன்வர வேண்டும் என்றார்.
முன்னதாக விழாவுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மு. செல்வராஜ் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் த.சகிலா வரவேற்றார். வெள்ளியணை காவல் உதவி ஆய்வாளர் மு.அழகுராமு, முன்னாள் எம்எல்ஏ வெள்ளியணை ராமநாதன் ஆகியோர் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். பள்ளியின் ஆசிரியர் க.வித்யபிரியா ஆண்டறிக்கையை வாசித்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.சுப்பிரமணி, அறிவியல் இயக்க செயலாளர் ஜான்பாட்சா, சிஐடியு சங்க மாவட்ட செயலாளர் சி.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். ஆசிரியர் பி.சாந்தி நன்றி கூறினார். மாணவ, மாணவிகளின் கலைநிகழச்சிகள் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

பழையகாயலில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT