கரூர்

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு  கணிதப்பாட சிறப்பு பயிற்சி

DIN

கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கணிதப்பாடம், கற்பித்தலுக்கான சிறப்புப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 
 அனைவருக்கும் கல்வித்திட்டம் சார்பில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமுக்கு பள்ளியின் தலைமையாசிரியை இரா.விஜயராணி வரவேற்றார். இதில் மாணவிகளுக்கு இயற்கணிதம் பாட சம்மந்தமான அடிப்படைக் கருத்துகள், செயல் திட்டங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. மலைக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து 40 மாணவிகள் பங்கேற்றனர்.  இதில், வட்டார வளமைய மேற்பார்வையாளர், பள்ளி பரிமாற்றத்திட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் மற்றும் இரு பள்ளிகளைச் சேர்ந்த பொறுப்பு ஆசிரியர்களும், கணிதப் பாட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மேலும், மாணவிகளுக்கு மெய் நிகர் வகுப்பு மூலம் கணித வினாடி - வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT