கரூர்

அரவக்குறிச்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

DIN

அரவக்குறிச்சி ஒன்றியம், புங்கம்பாபாடி மேல்பாகம் ஊராட்சிக்குட்பட்ட கணக்கு வேலம்பட்டியில் கடந்த மூன்று மாத காலமாக தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் திங்கட்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கணக்கு வேலம்பட்டியில் கடந்த மூன்று மாத காலமாக ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் விநியோகிக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திங்கள்கிழமை  காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  
அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் இரண்டு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT