கரூர்

ஆட்சியரிடம் குடிநீர் கேட்டு மனு அளிப்பு

DIN

கரூர் மாவட்டம் வெள்ளியணை வடபாகம் ஊராட்சிக்குட்பட்ட திருமலைநாதன்பட்டியைச் சேர்ந்த கிராமமக்கள் குடிநீர் கேட்டு ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
ஆட்சியரிடம் வழங்கிய மனுவில் அவர்கள் கூறியிருப்பது: எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு காவிரி ஆற்றின் கட்டளைப் பகுதியில் இருந்து காவிரி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஓராண்டாகவே குழாய் பழுது எனக் காரணம் கூறி காவரி குடிநீரை நிறுத்திவிட்டனர்.
இந்நிலையில் வெள்ளியணை வடபாகம் ஊராட்சி சார்பில் மூன்று ஆழ்குழாய் கிணறு அமைத்து அதிலிருந்து பெறப்படும் நீரை மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் ஏற்றி விநியோகித்து வந்தனர். தற்போது  ஆழ்குழாய் கிணறுகள் பழுது; ஒன்றில் தண்ணீர் இல்லை எனக்கூறி கடந்த நான்கு மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படாமல், குடிநீரின்றி அவதியுறுகிறோம். இதனால் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள ஜெகதாபி, ஓந்தாம்பட்டி, வெள்ளியணை ஆகிய பகுதிகளுக்குச் சென்று குடிநீரை எடுத்து வருகிறோம். இதனால் முதியோர்கள் கடும் அவதியுறுகின்றனர். எனவே விரைவில் எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT