கரூர்

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில்  சேரன் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி

DIN

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இப்பள்ளியில் பயின்ற 364 மாணவர்கள், 206 மாணவிகள் எழுதினர்.
வெள்ளிக்கிழமை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்றுள்ளது. கணிதப் பாடத்தில் 40 பேரும், அறிவியல் பாடத்தில் 28 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 73 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் 490 மதிப்பெண்களுக்கு மேல் 27 பேரும், 480-க்கும் மேல் 92 பேரும், 470-க்கு மேல் 158 பேரும், 460-க்கு மேல் 225 பேரும், 450-க்கு மேல் 277 பேரும் பெற்றுள்ளனர்.
சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் கே. பாண்டியன், பள்ளி முதல்வர் வி. பழனியப்பன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT