கரூர்

மாயனூர் மணல் குவாரியில் உள்ளூர் லாரிகளுக்கு முன்னுரிமைஅளிப்பதை கண்டித்து மே 23-இல் மறியல்

DIN

கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் மணல் குவாரியில் உள்ளூர் லாரிகளுக்கு மட்டும் மணல் அள்ள முன்னுரிமை அளிப்பதைக் கண்டித்து வரும் 23-ஆம் தேதி ஏமூர் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சம்மேளனத் தலைவர் செல்ல. ராஜாமணி கரூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
   கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாயனூர் அரசு மணல் குவாரியில் உள்ளூர் லாரிகளுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற அடிப்படையில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனால் கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வெளிமாவட்ட லாரிகளை மாயனூர் குவாரி அருகே நிறுத்தி வைக்கும்போது பொதுப்பணித்துறையினர் வரிசைப்படி லாரிகளை குவாரிக்கு மணல் எடுக்க அனுப்பாமல் உள்ளூர் லாரிகளை மட்டுமே முதலில் அனுப்புகின்றனர்.
மேலும் உள்ளூரைச் சேர்ந்த சிலர் குவாரிக்குச் செல்லும் இடத்தில் லாரிகளை தடுத்து ஆயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரம் வரை வசூலிக்கிறார்கள். தர மறுப்பவர்களை தாக்குகிறார்கள். எனவே உள்ளூர் லாரிகளுக்கு மட்டும் மணல் கொடுக்கும் மணல் குவாரி அலுவலர்களைக் கண்டித்தும், வரிசைப்படி குவாரியில் மணல் வழங்க அரசை வலியுறுத்தியும் வரும் 23-ஆம் தேதி கரூர் - திருச்சி சாலையில் ஏமூர் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.
பேட்டியின்போது செயலாளர் ஆர். பன்னீர்செல்வம், பொருளாளர் ஆர். ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் போராட்டம் நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT