கரூர்

மாவட்டத்தில் பரவலாக மழை:  மாயனூரில் 30 மி.மீ. மழை பதிவு

DIN

கரூர் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மாயனூரில் 30மி.மீ.மழையளவு பதிவானது.
 கரூர் மாவட்டத்தில் கடந்த 8 ஆம் தேதி இரவு பெய்த மழையில், 59 மி.மீ. மழை பதிவானது. 10 ஆம் தேதியும் மழை பெய்தது. இதில்,142.40 மி.மீ. மழையளவு பதிவானது. அதிக பட்சமாக கிருஷ்ணராயபுரத்தில் 47.60 மி.மீ. மழை பதிவானது. இந்நிலையில் புதன்கிழமை இரவு மாவட்டத்தின் பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.
வியாழக்கிழமை காலை வரை பெய்த மழையளவு: (மி.மீ): அரவக்குறிச்சி - 28.60, க.பரமத்தி - 16.20, குளித்தலை - 4, மாயனூர் - 30, கரூர் - 6.50, அணைப்பாளையம் - 19, கிருஷ்ணராயபுரம் - 29 என மொத்தம் 133.30 மி.மீ. மழை பதிவானது.
கரூர் மாவட்ட நிலத்தடி நீர் மட்டம் மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்சச் செயலாளர் இராமலிங்கம் தற்போது பெய்த மழை குறித்து கூறியதாவது: பருவமழை பெய்தால் மட்டுமே பயிர் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வார்கள். தற்போது பெய்யும் மழை கோடை வெப்பத்துக்கு இதமாக இருக்கலாம். இவை வெப்பச்சலனத்தால் உருவானவை. ஆகவே விவசாயத்துக்கு பயன்தராது. தென்மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கிவிட்டது. அது தமிழகத்திலும் வழக்கம்போது ஜூனில் தொடங்கினால் விவசாயத்துக்கு ஏதுவாக இருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT