கரூர்

காதல் தகராறில் மாணவர் கொலை: உறவினர்கள் போராட்டம்

DIN

கரூரில் காதல் தகராறில் மாணவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில்,  சடலத்தை வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் நகரக் காவல் நிலையத்தை  செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
கரூர் மாவட்டம், மணவாடி அருகே தனியார் சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான ரயில் தண்டவாளத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில் திங்கள்கிழமை காலை கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீஸார் இளைஞரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் உப்பிடமங்கலம் அருகிலுள்ள குப்பாகவுண்டனூரைச் சேர்ந்த முத்துசாமி மகன் கார்த்திக் (20) என்பதும், இவர் கரூர் அரசுக் கலைக் கல்லூரியில் பிபிஏ மூன்றாமாண்டு படித்து வந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், காதல் தகராறு காரணமாக கார்த்திக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இக்கொலை தொடர்பாக  கருர் கிருஷ்ணாகவுண்டனூரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் தர்மராஜ் (20), அவரது சகோதரர் ராமராஜ் (22), நண்பர் அருண் (19) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தர்மராஜ் கரூர் அரசுக் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் மூன்றாமாண்டு மாணவர் என்பதும், ராமராஜ் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
கொலைக்கான காரணம் :  கல்லூரி நண்பர்களான கார்த்திக், தர்மராஜ் ஆகிய இருவருக்கும் இடையே ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தர்மராஜ் வீட்டுக்குச் சென்ற கார்த்திக், என் காதலியுடன் எப்படி பேசலாம் எனக் கூறி அவரை தாக்கியதாகவும், அதைத் தொடர்ந்து கார்த்திக்கை கொலை செய்து தனது சகோதரருடன் தர்மராஜ் திட்டமிட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
 தர்மராஜ் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட மூவரும் உப்பிடமங்கலம் காட்டுப்பகுதிக்கு கார்த்திக்கை ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்த அழைத்துச் சென்று, பின்னர் பீர்பாட்டிலால் தாக்கியும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும் 3 பேரும் சேர்ந்து கொலை செய்து,  தண்டவாளத்தில் போட்டுச் சென்றதையும் போலீஸ் விசாரணையில் மூவரும் ஒப்புக் கொண்டனர்.
சடலம் வாங்க மறுத்து போராட்டம்: கார்த்திக்கின் சடலத்தை வாங்க மறுத்த அவரது உறவினர்கல் கரூர் நகரக் காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
 கார்த்திக்கின் கொலைக்கு காரணமான பெண் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அல்ல,  எங்கள் ஊருக்கு அருகிலுள்ளவர். அப்பெண்ணையும் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரிக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்  டி.எஸ்.பி.  கும்மராஜா,  காவல் ஆய்வாளர்கள் பிருத்விராஜ்,  சந்திரசேகரன்(பசுபதிபாளையம்) மற்றும் சந்தோஷ்குமார்(மதுவிலக்கு) ஆகியோர் கார்த்திக்கின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி,  சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறோம் எனக்கூறியதையடுத்து அவர்கள் உடலை வாங்கிச் சென்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT