கரூர்

வேலாயுதம்பாளையம் மலைவீதி விநாயகர் கோயில் குடமுழுக்கு

DIN

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மலைவீதி சக்தி விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.
விழாவையொட்டிகடந்த 14-ம் தேதி பக்தர்கள் காவிரியில் இருந்து புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் விநாயகர் வழிபாடு, தீப ஆராதனை, புண்யாகம், வாஸ்துசாந்தி, காப்புக்கட்டுதல், கும்ப அலங்காரம், யாகசாலைபிரவேசம், முதற்கால யாக வேள்வி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள்நடைபெற்றன.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30-க்கு மேல் 2-ம் காலயாக பூஜை, கலசம் புறப்பாடு மற்றும் கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT