முகப்பு
கரூர்

கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் கிராம உதவியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 9:35 am IST
பகிர்:

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் கிராம உதவியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஏ. அரசகுமார் தலைமை வகித்தார். செயலர் ஜி. தனலட்சுமி வரவேற்றார். புகழேந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  கோரிக்கைகளை விளக்கி மாநில செயலர் கே. கருணாகரன், செயற்குழு உறுப்பினர் கே. ஆசைத்தம்பி உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்த்தில் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், காலியிடங்களை நிரப்பிட வேண்டும், கிராம உதவியாளர்கள் அலுவலக உதவியாளர்களாக பதவி உயர்வை 10 சதவீதம் என்பதை 50 சதவீதமாக மாற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.