கரூர்

தமிழில் பெயர்ப்பலகைகளை எழுத வேண்டும்

DIN

அனைத்து நிறுவனங்களும் பெயர்ப்பலகைகளைத் தமிழில் மாற்றி எழுத வேண்டும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அமைக்கப்படும் பெயர்ப்பலகைகள்  முதலில் தமிழிலும், அதற்கெடுத்து தேவைப்பட்டால் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் இடம்பெற வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தினால் 5:3 என்ற  விகிதத்தில் அமைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
கரூர் மாவட்டத்திலுள்ள கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள், உட்பட அனைத்து  வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் நிறுவனத்தின் பெயர், கட்டாயமாக முதலில் தமிழிலும், அதற்கடுத்து தேவைப்பட்டால் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் இடம் பெறலாம்.   இவ்வாறு எழுதாத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: இரவு 7 மணிக்கு பாஜக ஆலோசனை

சந்திரபாபு நாயுடுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

நவீன், நிதீஷ், சந்திரபாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!

மோடி தலைமையில் இரவு 7 மணிக்கு பாஜக ஆலோசனை

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

SCROLL FOR NEXT