வேலைவாய்ப்பகத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வரும் 23-ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கரூர்வேலைவாய்ப்பகத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வரும் 23-ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வரும் 23-ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சே.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வெண்ணைமலையில் உள்ள கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 23-ம்தேதி தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களை, தையல் தெரிந்தவர்கள், உதவியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும். முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04324-223555 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.