கரூர்

பள்ளி மாணவர்களுக்கு  மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டி

DIN

கரூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
 கரூர் திருமாநிலையூரில் பீல்டு ஆர்ச்சரி அசோசியேசன் சார்பில் நடைபெற்ற இப்போட்டியை கே.கே.கணேசன் தொடங்கி வைத்தார். இதில், 10,12,14,17 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் 170 பேர் பங்கேற்றனர்.
 இவர்களுக்கு 10 மீ., 20.மீ., 30 மீ., தொலைவுகளில் சிங்கிள் ஸ்பாட், 5 ஸ்பாட், அணிமல் சூட்டிங் என மூன்று பிரிவுகளில் அம்பு எய்தல் போட்டிகள் நடைபெற்றது. 
 போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் எம்.ரவிசங்கர் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT