கரூர்

அதிகளவில்  குவிந்தாலும் சூடுபிடிக்காத கரும்பு விற்பனை!

DIN

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து செங்கரும்புகள் கரூருக்கு அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இருப்பினும் கூடுதல் விலை காரணமாக மக்கள் அதை வாங்க போதிய ஆர்வம் காட்டவில்லை.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அன்று பொங்கல் பொருட்களில் முக்கிய இடத்தைப் பிடிப்பது செங்கரும்பு. 
பொங்கல் பண்டிகைக்காக கரூர் பகுதிக்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தம், திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செங்கரும்புகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன. 
கரூர் நகராட்சி அலுவலகம் முன் மற்றும் திருமாநிலையூர், சுங்ககேட், உழவர்சந்தை, பேருந்து நிலைய ரவுண்டானா, கோவை சாலை, பேருந்துந நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு ரூ. 600 முதல் ரூ.750 வரை விற்கப்படுகிறது. 
கடந்தாண்டு ரூ.400 முதல் 500 வரை விற்கப்பட்ட நிலையில் இந்தக் கூடுதல் விலையால் பொதுமக்கள் கரும்பை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.  கடந்தாண்டை விட நிகழாண்டில் வரத்து குறைவாக இருப்பதால் விலையும் உயர்ந்துள்ளது என்றனர் வியாபாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT