கரூர்

டிஎன்பிஎல்: ரூ.5.50 லட்சத்தில் சமூகநலப் பணி

DIN

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகதி நிறுவனத்தின் அறக்கட்டளையின் மூலம், நிறுவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சமூக நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 
அதன்படி அறக்கட்டளை சார்பில் 47 மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.2.15 லட்சம்,  20 கோயில்களுக்கு குடமுழுக்கு, புனரமைப்பு மற்றும் ஆராதனைக்காக ரூ.3.15 லட்சம்,  விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்காக ரூ. 20 ஆயிரம் என மொத்தம் ரூ.5.50 
லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்  வழங்கும் நிகழ்ச்சி காகித ஆலை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. 
இதில், நிறுவனத்தின் அதிகாரிகள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT