அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி கரூர் ஆட்சியரிடம் 3 கிராம மக்கள் மனு
கிராமப் பகுதியில் நள்ளிரவில் சட்ட விரோதமாக ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திங்கள்கிழமை ஆட்சியர் த. அன்பழகனிடம் நெரூர் தென்பாகம்,
கிராமப் பகுதியில் நள்ளிரவில் சட்ட விரோதமாக ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திங்கள்கிழமை ஆட்சியர் த. அன்பழகனிடம் நெரூர் தென்பாகம், அரங்கநாதன்பேட்டை, சோமூர் கிராமமக்கள் மனு அளித்தனர்.
பாமக மாநில துணை பொதுச் செயலாளர் பிஎம்.கே. பாஸ்கரன் தலைமையில் அக்கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:
கடந்த சனிக்கிழமை (மே 12) நள்ளிரவில் அரங்கநாதன்பேட்டைக்கு திடீரென 2 போர்வெல் வண்டிகளுடன் 10-க்கும் மேற்பட்ட நபர்கள், அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களது பணியைத் தடுத்து நிறுத்தினோம்.
எனவே கிராமத்துக்குள் நள்ளிரவில் சட்ட விரோதமாக ஆய்வு செய்த மத்திய அரசு அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்கள் பகுதிக்கு மீண்டும் வந்து ஆய்வு மேற்கொண்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.
மத்திய நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்ய வந்திருந்ததாக மனு அளித்த பொதுமக்களிடம் ஆட்சியர் தெரிவித்தார்.