கரூர்

டிச. இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்

DIN

மாத இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் கணினி, இணையதள வசதியுடன்  கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்றார் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.
பள்ளிக் கல்வித்துறை  சார்பில் கரூரில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மாநில அளவிலான 61-வது குடியரசு தின குழு விளையாட்டுப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில், மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்து மேலும் அவர் பேசியது:
இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசியளவிலான போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கவும், தேசிய, சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கும் ஆகும் செலவினங்களுக்காக கடந்த 5 ஆண்டுகளாக ரூ. 10 கோடியை  தொடர் செலவினமாக தமிழக அரசு ஒதுக்கி வருகிறது. இதனால் தேசிய  அளவிலான  விளையாட்டுப் போட்டிகளில் 2012-2013 ம் கல்வியாண்டில் 12 ஆம் இடத்திலிருந்த தமிழக பள்ளிக் கல்வித் துறை, 2013-2014 ம் கல்வியாண்டில் 7-ம் இடத்திற்கும், 2014-2015ம் கல்வியாண்டில் 6 இடத்திற்கும், 2015-2016 ஆம் கல்வியாண்டில் 5-   இடத்திற்கும்,   2016-2017ஆம்   கல்வியாண்டில்   5-ம்டத்தையும், 2018 ஆம் கல்வியாண்டில் 7-ம்இடத்தையும் பிடித்துள்ளது. 
கரூர் மாவட்டத்தில் நடப்புக் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக் பள்ளிகளில் 1,19,762 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4,34,959 எண்ணிக்கையிலான விலையில்லா பாடநூல்கள், 3,90,985 எண்ணிக்கையிலான விலையில்லா பாடக் குறிப்பேடுகள், 23,563 எண்ணிக்கையிலான பேருந்து பயண அட்டைகள்,  11,318 எண்ணிக்கையிலான விலையில்லா நில வரைபட ஏடுகள், 25,670 எண்ணிக்கையிலான விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள், 23,538 எண்ணிக்கையிலான விலையில்லா வண்ணப் பென்சில்கள்,  15,285 எண்ணிக்கையிலான விலையில்லா கிரையான்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் 84,301 எண்ணிக்கையிலான விலையில்லா காலணிகள், 13,384 எண்ணிக்கையிலான விலையில்லா மிதிவண்டிகள், 25,670 எண்ணிக்கையிலான விலையில்லா புத்தகப்பைகள், 18,864 எண்ணிக்கையிலான விலையில்லா மடிக்கணினிகள் விரைவில் அளிக்கப்படவுள்ளது. 
கரூர் மாவட்டத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் நபார்டு திட்டத்தின் கீழ் தலா 1.68 கோடி மதிப்பில் நான்கு பள்ளிகளுக்கும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.1.79 கோடியில் இரு  பள்ளிகளுக்கு புதிய கட்டடங்களும் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளன. பள்ளி மாணவ-மாணிவகளுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் விலையில்லா மிதிவண்டிகளும், ஜனவரி மாதத்திற்குள் விலையில்லா மடிக்கணினியும் வழங்கப்படும். முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் ரூ. 8.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 465 மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் கணினி வசதி மற்றும் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட்  வகுப்புகள் அமைக்கப்படும் அளவிற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள 26,000 மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்துள்ளனர்.
1,6,9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு ஏற்கெனவே பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. வரும் கல்வியாண்டில் பிளஸ்-2வகுப்பு முடித்தவுடனே வேலை கிடைக்கும் வகையில் பாடத்திட்டம் சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டு சீருடை மாற்றப்படும் என்றார். 
நிகழ்ச்சியில் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கீதாமணிவண்ணன் உள்ளிட்டோர் பேசினர். 
நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், பள்ளிக் கல்வித் துறை நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குநர் மொ. வாசு, வருவாய் கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி, முதன்மைக்கல்வி அலுவலர் க. தங்கவேல், மாவட்ட கல்வி அலுவலர்கள் மு. கபீர் (குளித்தலை), க. கனகராஜ் (கரூர்), கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஏ.ஆர். காளியப்பன்,எஸ். திருவிகா, வை. நெடுஞ்செழியன், மார்க்கண்டேயன், ஜெயராஜ் மற்றும் தானேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

SCROLL FOR NEXT