கரூர்

மனுக்களின் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆட்சியர்

DIN

பொதுமக்களின் மனுக்களுக்கு காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, , தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 327 மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அவற்றை  சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆட்சியர் வழங்கி மேலும் பேசியது: 
குறைதீர்க்கும் முகாம்களில் குறிப்பாக முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் முன்னிலையில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் ஆகியவற்றிற்கு, அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மக்களைத்தேடி வருவாய்த்துறை, அம்மா திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீதும் உரிய விசாரணை மேற்கொண்டு காலதாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஒருவருக்கு நவீன செயற்கை கால் உபகரணம்,  வருவாய் துறை சார்பில், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000 வீதம் ரூ.48,000 மதிப்பில் நலிவுற்ற கலைஞர்களுக்கான உதவித்தொகையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை ஆட்சியர் த.குமரேசன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஜான்சி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT