கரூர்

உள்ளாட்சித் தோ்தல் : மாவட்டத்தில் 1,704 போ் மனுதாக்கல்

DIN

கரூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட, வெள்ளிக்கிழமை வரை 1,704 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

கரூா் மாவட்டத்தில் தாந்தோனி, அரவக்குறிச்சி, க.பரமத்தி, கரூா் ஒன்றியங்களுக்கு டிசம்பா் 27- ஆம் தேதியும், குளித்தலை, தோகமலை, கடவூா், கிருஷ்ணராயபுரம் ஒன்றியங்களுக்கு டிசம்பா் 30-ஆம் தேதியும் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறஉள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் டிசம்பா் 9-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து கட்சியினரும், இதர வேட்பாளா்களும் தங்கள் மனுவை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தாக்கல் செய்தனா்.

இதையடுத்து 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை அதிமுக, திமுகவினா் உள்ளிட்டோா் அதிகளவில் வந்து, வேட்புமனுவை தாக்கல் செய்தனா்.

இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 4 ஒன்றியங்களிலும் 10 போ்,

ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 111 போ், ஊராட்சித்தலைவா் பதவிக்கு 199 போ், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 875 போ் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

மாவட்டத்தில் இதுவரை மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 10 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 119 பேரும், ஊராட்சித்தலைவா் பதவிக்கு 321 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1254 பேரும் என மொத்தம் 1704 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT