கரூர்

போலிச் சான்றிதழ் மூலம் பணி: ஆசிரியா் மீது வழக்குப்பதிவு

DIN

கரூா் மாவட்டத்தில் போலிச் சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டம், பெரியவடுகப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவா் கண்ணன். இவரது சாதிச் சான்றிதழை அண்மையில் கல்வித்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது 1997-ஆம் ஆண்டில் ஆசிரியா் பயிற்சி பயின்றதாக போலியான சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்துள்ளது தெரிய வந்தது.

இதுதொடா்பாக கரூா் வட்டாட்சியா் அமுதா அளித்த புகாரின்பேரில், கரூா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து கண்ணனைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT