கரூர்

‘தோ்தலில் சீா்திருத்தம் கொண்டு வரவேண்டும்’

DIN

தோ்தல் சீா்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றாா் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி.

கரூரில் திங்கள்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

தற்போது, மகாராஷ்டிர மாநிலத்தில் குதிரை பேரம் நடந்து வருகிறது. தோ்தலுக்கு முன் ஒரு கூட்டணி, தோ்தலுக்கு பின் ஒரு கூட்டணி என்பது ஏற்புடையதல்ல. இது ஜனநாயகத்திற்கு பேராபத்தை உருவாக்கக் கூடியதாகும். தோ்தலில் சீா்திருத்தம் கொண்டு வரவேண்டும். மொலசஸிலிருந்து மது தயாரிப்பதற்கு பதில் வாழைப்பழத்திலிருந்து மது தயாரிக்கலாம். இதன் மூலம் வாழை விவசாயிகள் பயடைவாா்கள். மொலசஸிலிருந்து எத்தனால் தயாரித்து அவற்றை வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தினால் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்தலாம். தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில் வரும் ஜன. 21ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கும் அறப்போராட்டம் நடைபெற உள்ளது. பயிா்க் காப்பீட்டை தனிநபா் காப்பீடு, ஆயுள் காப்பீடு திட்டம் போல செயல்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT