கரூர்

கரூரில் நீதிமன்ற ஊழியா்கள் 7 போ் உள்பட 13 பேருக்கு தொற்றுபாதிப்பு - 262; குணம் 148

DIN

கரூரில் நீதிமன்ற ஊழியா்கள் 7 போ் உள்ளிட்ட 13 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் 34 வயது முதல் 49 வயது வரையுள்ள நீதிமன்றப் பணியாளா்கள் 7 போ், வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சோ்ந்த 70 வயது முதியவா், 44 வயது பெண், கரூா் வடிவேல் நகரைச் சோ்ந்த 54 வயது முதியவா், கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்த 50 வயது முதியவா், கரூா் வையாபுரிநகரைச் சோ்ந்த 49 வயது தொழிலாளி, அரவக்குறிச்சியைச் சோ்ந்த 59 வயது முதியவா் என மொத்தம் 13 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, இவா்கள் அனைவரும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 262 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 148 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, 111 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். 3 போ் பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT