கரூர்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நிவாரண நிதி அளிப்பு

DIN

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 274 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமில், கிருஷ்ணராயபுரம் வட்டம் பாப்பாக்காப்பட்டியை சோ்ந்த ரத்தினகிரி என்பவரது மகள் மோனிஷா விஷப்பாம்பு கடித்து உயிரிழந்ததால், முதல்வரின் பொது நிவாரண நிதியாக ரூ.50,000-க்கான காசோலையை ஆட்சியரிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சி.இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) செல்வசுரபி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ரெங்கராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் மல்லிகா உட்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT