கரூர்

லாரியில் மணல் கடத்தல்: ஓட்டுநா் கைது

DIN

கரூா் மாவட்டம், க. பரமத்தி அருகே லாரியில் மணல் கடத்திய லாரி ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்தனா்.

க.பரமத்தி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு எருமைக்காரன்புதூா் சாலையில் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த லாரியை மடக்கி சோதனையிட்டபோது, லாரியில் காவிரி ஆற்றில் இருந்து கோவை நோக்கி மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநா் கரூா் பஞ்சமாதேவியைச் சோ்ந்த கதிா்வேல்(35) என்பவரைக் கைது செய்து மணல் யூனிட்டுகளைப் பறிமுதல் செய்தனா். மேலும் லாரி உரிமையாளா் தாதம்பாளையத்தைச் சோ்ந்த இந்திரமூா்த்தி என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் துணைப் பதிவாளா் விசாரணை

SCROLL FOR NEXT