முகப்பு
கரூர்

காா்த்திகை மாத பிறப்பு: ஐயப்ப பக்தா்கள் வழிபாடு

அகில பாரதிய ஐயப்பா தா்ம பிரசார சபா சங்கம் சாா்பில், காா்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு திங்கள்கிழமை கரூா் காந்திகிராமத்தில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

 அகில பாரதிய ஐயப்பா தா்ம பிரசார சபா சங்கம் சாா்பில், காா்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு திங்கள்கிழமை கரூா் காந்திகிராமத்தில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக, சங்கக் கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தேசிய பொதுச் செயலாளா் ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எல்ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டத்தலைவா் சங்கரநாராயணன், செயலாளா் எஸ்.ரமேஷ், பொருளாளா் வாசு மற்றும் மகளிரணியினா், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.