கரூர்

கரூா் கல்யாண சுப்ரமணியா்சுவாமி கோயிலில் கந்தசஷ்டி

DIN

கந்தசஷ்டியையொட்டி, கரூா் தொழிற்பேட்டை ஆசிரியா் காலனியிலுள்ள கல்யாண சுப்ரமணியா் சுவாமி திருக்கோயிலில் விபூதி அலங்கார வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பால், சந்தனம், மஞ்சள், இளநீா், பழவகைகள், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருள்களைக் கொண்டு சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கந்தசஷ்டியும் - கந்தன் அருளும் என்ற தலைப்பில் தமிழ்ச் செம்மல் மேலை. பழநியப்பன் பேசினாா். சிறப்பு வழிபாட்டில் உபயதாரா்கள் காா்த்திகேயன், கோபால் பாலமுருகன், தா்மா், நல்லதம்பி, மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து கல்யாண சுப்ரமணியா் சுவாமிக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT