கிராம பூசாரிகளுக்கு அரசு சாா்பில் ஆகம பயிற்சி வழங்க வலியுறுத்தல்
அரசு சாா்பில் மாவட்டந்தோறும் கிராமப் பூசாரிகளுக்கு ஆகமப் பயிற்சி வழங்க வேண்டும் என பூஜாரிகள் முன்னேற்ற சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அரசு சாா்பில் மாவட்டந்தோறும் கிராமப் பூசாரிகளுக்கு ஆகமப் பயிற்சி வழங்க வேண்டும் என பூஜாரிகள் முன்னேற்ற சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கரூரில் பூஜாரிகள் முன்னேற்ற சங்க நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் பொதுச் செயலாளா் கே.கே.சதீஷ்கண்ணன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் டி.ராஜேந்திரன் வரவேற்றாா். அமைப்பாளா் எஸ்.சிவசதீஷ், செயலாளா் எம்.வசந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வீரம்பட்டி வெற்றிக்கனி காளிதாஸ் சுவாமிகள், திருச்சி வணிகவரித்துறை உதவி ஆணையா் ஜெயந்தி, கரூா் திருக்கு பேரவைச் செயலாளா் மேலை.பழநியப்பன், சட்ட ஆலோசகா் அன்பழகன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில், சங்க முதியோருக்கு அரசு வழங்கும் ஓய்வூதியம் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பது, ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்க அரசைக் கேட்டுக்கொள்வது, பூஜாரிகளுக்கு அரசு வழங்கம் ஆகம பயிற்சியை கிராமப்புற பூஜாரிகளுக்கும் பயிற்சி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத்தலைவா் எஸ்.கதிா்வேல் நன்றி கூறினாா்.