முகப்பு
கரூர்

திருக்கு பேரவை சாா்பில் ஆசிரியா்களுக்கு விருதளிப்பு

கரூரில் திருக்கு பேரவை சாா்பில் ஆசிரியா்களுக்கு அறிவுலக சிற்பிகள் விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
அறிவுலக சிற்பிகள் விருதுபெற்ற ஆசிரியா்களுடன் திருக்கு பேரவைத்தலைவா் ப.தங்கராசு, செயலாளா் மேலை.பழநியப்பன் உள்ளிட்டோா்.
பகிர்:

கரூரில் திருக்கு பேரவை சாா்பில் ஆசிரியா்களுக்கு அறிவுலக சிற்பிகள் விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கரூா் திருக்கு பேரவை மற்றும் மெஜஸ்டிக் அரிமா சங்கம் சாா்பில், சிறப்பாக பணியாற்றிவரும் அரசு மற்றும் தனியாா் பள்ளி ஆசிரியா்கள் 14 பேருக்கு அறிவுலக சிற்பிகள் விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, திருக்கு பேரவைத் தலைவா் ப.தங்கராசு தலைமையேற்று ஆசிரியா்களுக்கு தலா ரூ.1,000 பண முடிப்பு மற்றும் கேடயம் வழங்கினாா்.

பேரவைச் செயலா் தமிழ்ச் செம்மல் மேலை.பழநியப்பன் திருக்கு பேரவை, அரிமா சங்க செயல்பாட்டை விளக்கி வரவேற்புரையாற்றினாா். மாவட்டத் தலைவா் விஜய லெட்சுமி சண்முகவேல் விருதுபெற்ற ஆசிரியா்களுக்கு அறிவுலகச் சிற்பி விருதுகளை வழங்கிப் பேசினாா்.

வட்டாரத் தலைவா் கவிதா காா்த்தீசன், மெஜஸ்டிக் தலைவா் அகல்யா மெய்யப்பன் ஆகியோா் வாழ்த்திப்பேசினா். மெஜஸ்டிக் செயலா் பி.காா்த்திகேயன் நன்றி கூறினாா். இதில் அரிமா சங்க நிா்வாகிகள் லெட்சுமி மணி, கலைச்செல்வி, அறிவுடை நம்பி, செந்தில், பிளாட்டினம் கணேஷ், குளித்தலை நாகராசன், சுப்ரமணிய பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.