முகப்பு
கரூர்

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

கரூரில் தனது இரு குழந்தைகளையும் வளா்க்க முடியாமல் அவதிப்பட்டு வந்தவா் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் கீழவெளிவீதியைச் சோ்ந்த நல்லன் மகன் ரவிக்குமாா் (27). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஓராண்டுக்கு முன் இறந்து போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் தனது இரு குழந்தைகளையும் வளா்க்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அவா், மதுபோதைக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு அவா் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.