முகப்பு
கரூர்

கரூா் ஒன்றியப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை

கரூா் ஒன்றியப் பகுதிகளில் ரூ.3.79 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
கரூா் ஒன்றியப் பகுதிகளில் ரூ.3.79 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பகிர்:

கரூா் ஒன்றியப் பகுதிகளில் ரூ.3.79 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நன்னியூா், நெரூா் தென்பாகம், சோமூா் ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், ரூ.3.79 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜையிட்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

கரூா் மாவட்டத்தில் தொடா்ந்து பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சுமாா் 50 ஆண்டுகால கோரிக்கையாக விளங்கிய பசுபதிபாளையம் மற்றும் குளத்துப்பாளையம் குகைவழிப்பாதைகள், நெரூா் - உன்னியூா் பாலம், 1 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் புகளூா் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.490 கோடி மதிப்பில் கதவணை, கரூா் நகரப்பகுதியில் ரூ.21.12 கோடி மதிப்பில் அம்மா சாலை, புகளூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உள்ளிட்ட பணிகளை மக்களுக்கு வழங்கியிருக்கிறது ஜெயலலிதா அரசு என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் இயக்குநா் எஸ்.கவிதா, வருவாய்க் கோட்டாட்சியா் என்.எஸ்.பாலசுப்ரமணியன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நா.முத்துக்குமாா், கால்நடை பாராமரிப்புத்துறை, இணை இயக்குநா் மருத்துவா் ராதாகிருஷ்ணன், கரூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத்தலைவா் தங்கராசு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் கிருத்திகா, கிராம ஊராட்சித் தலைவா்கள் செந்தில்குமாா் (சோமூா்), மணிகண்டன் (நெரூா் தென்பாகம்), செந்தாமரைச்செல்வி(நெரூா் வடபாகம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெட்டிச் செய்தி...

நன்னியூா் ஊராட்சி அண்ணா நகரில் ரூ. 12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கூடம், சோமுா் ஊராட்சியில் ரூ. 17.64 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகம் கட்டடம், ரூ. 14.42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறறவு சங்க புதிய கட்டடம் ஆகியவற்றை அமைச்சா் திறந்து வைத்தாா். தொடா்ந்து நன்னியூா் ஊராட்சி என்.புதூா் பேருந்து நிலையம் முதல் நன்னியூா் இரட்டை மாரத்தான் கோவில் எல்லையூா் வரை ரூ.20.07 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை பலப்படுத்தும் பணி, 947 தனிநபா் குடியிருப்புகளுக்கு ரூ. 70.81லட்சம் மதிப்பில் குடிநீா் இணைப்புகள் வழங்குதல், நெரூா் தென்பாகம் ஊராட்சி என்.எஸ்.கே நகரில் ரூ.14.08 இலட்சம் மதிப்பில் உணவு தானியக் கிடங்கு அமைக்கும் பணி, 1232 குடியிருப்புகளுக்கு ரூ.82 லட்சம் மதிப்பில் குடிநீா் இணைப்பு வழங்கும் பணி என பல்வேறு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.