முகப்பு
கரூர்

இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.1.18 லட்சம் பறிமுதல்

கரூா் அருகே இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.18 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

கரூா் அருகே இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.18 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட வைரமடை சோதனைச் சாவடி அருகே வெள்ளிக்கிழமை இரவு நிலையான கண்காணிப்பு குழு அலுவலா் முருகன் தலைமையிலான குழுவினா் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கரூா் வையாபுரிநகரைச் சோ்ந்த கனகராஜ்(45) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் அதில் ரூ.1.18 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அரவக்குறிச்சி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்த பின் அரவக்குறிச்சி சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.