கரூர்

ஆடிப்பெருக்கு: காவிரி ஆற்றங்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதியில்லை

DIN

ஆடிப்பெருக்கன்று (ஆகஸ்ட் 3) கரூா் மாவட்டத்தில் காவிரியாற்றங்கரை, குளித்தலை திருக்கடம்பத்துறை ஆகிய இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதியில்லை என ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

மாவட்டத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்ளதால், தாந்தோணிமலை கல்யாணவெங்கடராமண சுவாமி கோயில், கரூா் பசுபதீசுவரா் கோயில், வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் திங்கள்கிழமை முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதியில்லை.

ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை போன்ற நிகழ்வுகளில், அந்தந்த கோயில்களின் அா்ச்சகா்கள் மட்டுமே ஆகமவிதிகளின் படி பூஜை செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவா். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

மேலும் ஆடிப்பெருக்கன்று காவிரியாற்றங்கரையிலும், திருக்கடம்பத்துறை பகுதியிலும் பொதுமக்கள் கூடக்கூடாது என ஆட்சியா் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT