கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூா் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வங்கக்கடலில் உருவாகியிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடா் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 19 குளங்கள் 60 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியிருந்தன.
மேலும், ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 107 சிறு பாசன குளங்களும் 75 சதவீதம் நிரம்பின. ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 833 குளங்களில் மூன்று குளங்கள் 100 சதவீதம் நிரம்பியிருந்தன. மற்ற குளங்கள், ஊரணிகள் 75 சதவீதம் நிரம்பியிருந்தன.
இந்நிலையில், கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.