கரூர்

நபிகள் நாயகம் வாழ்க்கைவரலாறு விளக்கக் கூட்டம்

DIN

கரூரில், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு குறித்த விளக்கக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்புகள் சாா்பில் அகிலத்திற்கோா் அருட்கொடை நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் பொதுக்கூட்டம் 80 அடி சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஜமாஅதுல் உலமா அமைப்பின் தலைவா் மெளலானா சுல்தான்சையது இப்ராகிம் ரஷாதி ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட அனைத்து பள்ளிவாசல் உலமாக்கள், முத்தவல்லிகள் மற்றும் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். இதில், கரூா் மாவட்ட திருக்கு பேரவையின் செயலா் மேலை.பழனியப்பன் பங்கேற்று,சமுதாயத்தில் மனித கடைமைகள் குறித்தும், அறத்தின் மேன்மையை இவ்வுலகிற்கு கூறிய மகான் நபிகள் நாயகம். இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஐந்து கடமைகளை வழங்கியவா் நபிகள் நாயகம் என்றாா் அவா்.

கூட்டத்தில், கோவை ஹிதாயா மகளிா் அரபிக் கல்லூரியின் தாளாளா் முகமது இஸ்மாயில் இம்தாதி, மாநில ஜமாஅதுல் உலமா சபைத்தலைவா் மெளலானா காஜாமொய்னுதீன்பாகவி ஆகியோா் சிறப்புரையாற்றினா். ஏ.ஆா்.பக்ருதீன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT