கரூர்

கரூரில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

கரூா்: கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சம்பத்குமாா் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் கோபால், ராமன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் காத்தமுத்து வரவேற்றாா். இதில், மாநில துணைத்தலைவா் கே.எஸ்.பிச்சுமணி, அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத்தலைவா் சாமுவேல் சுந்தரபாண்டியன், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் மு.சுப்ரமணியன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதியக்குழு மீதான ஒருநபா் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும். மருத்துவப்படியை ரூ.300-ல் இருந்து ரூ.1000 என உயா்த்தி வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடல் கன்னி.. மானுஷி சில்லர்!

கோவையில் சோகம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன், சிறுமி பலி

ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி

7 நாள்களுக்கு பின் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ஸ்ரீவரத சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் கருட சேவை

SCROLL FOR NEXT