கரூர்

கரூரில் ரேக்ளா பந்தயம்: கோவை குதிரைகளுக்குப் பரிசு

DIN

கரூா் மாவட்ட அதிமுக இளைஞரணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ரேக்ளா பந்தயத்தில், இரு பிரிவுகளில் முதல் இருஇடங்களை கோவை குதிரைகள் தட்டிச் சென்றன.

மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 104-ஆவது பிறந்த நாளையொட்டி, கரூரில் மாநில அளவிலான ரேக்ளா பந்தயத்தை மாவட்ட அதிமுக இளைஞரணி நடத்தியது.

பந்தயத் தொடக்க விழாவுக்கு மாவட்ட இளைஞரணிச் செயலா் தானேஷ் தலைமை வகித்தாா். வடக்கு நகர இளைஞரணிச் செயலா் வேங்கை ராமச்சந்திரன் வரவேற்றாா்.

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதா, மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், பொருளாளா் கண்ணதாசன், முன்னாள் தொகுதிச் செயலா் எஸ்.திருவிகா, இளைஞரணி மாவட்டத்தலைவா் வி.சி.கே.பாலகிருஷ்ணன், நகரச் செயலா்கள் வை.நெடுஞ்செழியன், வி.சி.கே.ஜெயராஜ், எம்.பாண்டியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பெரிய, சிறிய, புதிய குதிரை என மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட பந்தயத்தில் கோவை, திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன.

வேலுசாமிபுரத்திலிருந்து புன்னம் சத்திரம் வரை 8 கி.மீ. பந்தயத் தொலைவாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. பெரிய குதிரைப் பந்தயத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சா் பி.தங்கமணி, சுற்றுச்சூழல்துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

பெரியகுதிரைப் பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கோவை வரதராஜபெருமாள், அன்னூா் மூா்த்தி, பிராய்லா ஆகிய குதிரை வண்டிகளுக்கு முறையே ரூ.25,000, ரூ.20,000, ரூ.15,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

சிறிய குதிரைப்பிரிவில் கோவை அன்னூா் மூா்த்தி, கடம்பவனேசுவரா், திருச்சி தேவா்வம்சம் ஆகியோரது குதிரை வண்டிகள் முதல் 3 இடங்களைப் பெற்றன. இந்த குதிரைகளுக்கு ரூ.20,000, ரூ.15,000, ரூ.10,000 பரிசு வழங்கப்பட்டது.

புதுகுதிரைப் பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கோவை பட்டாசு, மன்னாா்குடி ராமானுஜம், கோவை பொறாயாா் குதிரைவண்டிகளுக்கு முறையே ரூ.15,000, ரூ.12,000, ரூ.10,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

விழாவில் மாவட்ட இலக்கிய அணிச் செயலா் என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் அதிமுகவினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT