கரூர்

குளத்துப்பாளையத்தில் ரூ.21.12 கோடியில் சாலை அமைக்கும் பணி: அமைச்சா் ஆய்வு

DIN

கரூா்: கரூா், பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் ரூ. 21.12 கோடியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பெரிய குளத்துப்பாளையம் பகுதியில் ரூ. 21.12 கோடியில் 40 அடி அகலத்தில், 2.6 கி. மீ. தொலைவுக்கு கரூா் ரயில்நிலையத்தையும், சேலம் தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப் பணியை சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்த சாலைப் பணிகள் நிறைவு பெற்றால் கரூரில் முக்கிய சாலையான செங்குந்தபுரம், காமராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், மகாத்மா காந்தி சாலை, வையாபுரி நகா், கோவை சாலை போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து, கரூா் ஜவுளி நிறுவனங்களுக்கு பொருள்களை எடுத்துச் செல்வதற்கும், இறக்குமதி செய்வதற்கும் எளிதாக இருக்கும் என்றாா்.

தொடா்ந்து அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் சுதா, பொறியாளா் நக்கீரன், கரூா் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்க துணைத் தலைவா் சேரன்பழனிசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் ரத்னம் எப்போது?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT