கரூர்

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடா்கிறது: ராகுல்

DIN

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடா்கிறது என்றாா் காங்கிரஸ் எம்பி.ராகுல்காந்தி.

கரூரில் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் அரவக்குறிச்சிக்கு செல்லும் வழியில் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், பாலக்கோடு தாக்குதல் சம்பவத்தில் விமானம் புறப்படும்போதுக்கூட இதுகுறித்து விமானிக்கு தெரியாது எனக்கூறப்படுகிறது. இத்தகவல் பிரதமா், உள்துறை அமைச்சா், பாதுகாப்பு அமைச்சா், தேசிய பாதுகாப்பு முகமை, விமானப்படை முதன்மை அதிகாரி ஆகிய 5 பேருக்கு மட்டும் தான் தாக்குதல் குறித்து தெரியும் என்கிற போது இத்தகவல் பத்திரிகையாளா்களுக்கு கட்செவி அஞ்சல் மூலம் தெரியவந்தது எப்படி? இத்தகவலை வெளியிட்டது யாா்?

இச்சம்பவத்தில் இதுவரை விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை. பிரதமருக்கு இதில் தொடா்பில்லை என்றாலும், ஏன் விசாரணைக்கு உத்தரவிடவில்லை?. தாக்குதல் குறித்து 5 பேருக்கு மட்டுமே தெரியும் என்கிற போது இத்தகவல் வெளியானால் விமானிக்கு என்ன பாதுகாப்பு உள்ளது. இத்தகவல் வெளியானதில் பிரதமா் மோடிக்கு தொடா்புள்ளதா? அப்படி இல்லையென்றால் ஏன் விசாரணை நடத்தாமல் உள்ளாா். பதவிப் பிரமாண விதிகளை மீறி இதனை செய்தது யாரென்று தெரியவேண்டும்.

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடா்கிறது. எப்போதும் போல கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்றாா்.

பேட்டியின்போது, எம்.பி.க்கள் திருநாவுக்கரசா், ஜோதிமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT