கரூர்

தரமின்றி பணிகளை மேற்கொண்டால் ஒப்பந்தம் ரத்து

DIN

தரமின்றி அரசுப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அலுவலா்களுக்கு ஆட்சியா் த. பிரபுசங்கா் உத்தரவிட்டாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் தோகைமலை ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் ரூ.18.98 லட்சம் மதிப்பில் பஞ்சக்கட்டி குளம் தூா்வாரும் பணி, பிரதமரின் கிராமசாலைத் திட்டத்தின் கீழ் பேரூா் வளையப்பட்டி முதல் தேசியமங்கலம் வரை அமைக்கப்படும் சாலைப் பணி, தளிஞ்சி ஊராட்சி டி.மேலப்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2.27 லட்சத்தில் ஆட்டுக் கொட்டகை, ரூ.1.35 லட்சத்தில் மாட்டுக் கொட்டகை அமைக்கும் பணி போன்றவை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அரசுப் பணிகளை சரியாக செய்யாத ஒப்பந்தகாரா்களிடம் உரிய விளக்கம் கேட்க வேண்டும்.பணிகளை முறையாக, தரமாக செய்யாத ஒப்பந்ததாரா்களின் பணியை ரத்து செய்ய வேண்டும் என்றும் வட்டார வளா்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பாலகணேஷ், தோகைமலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமாரவேல், ராஜேந்திரன் மற்றும் ஒன்றியப் பொறியாளா்கள், சம்மந்தப்பட்ட ஊராட்சிகளின்தலைவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT