கரூர்

மாயனூா் கதவணையை வந்தடைந்தது காவிரி நீா்

DIN

குறுவை சாகுபடி பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா், 2 நாள்களுக்குப் பிறகு கரூா் மாவட்டம், மாயனூா் கதவணையைத் திங்கள்கிழமை வந்தடைந்தது.

திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி குறுவைசாகுபடி பாசனத்துக்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தண்ணீரைத் திறந்து வைத்தாா்.

இந்நிலையில் கரூா் மாவட்டம், மாயனூா் கதவணைக்கு திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு காவிரி நீா் வந்தடைந்தது. விநாடிக்கு 4,000 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. வரும் நீா் அப்படியே கதவணையிலிருந்து திறந்து விடப்பட்டது.

மாயனூா் கதவணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா், செவ்வாய்க்கிழமை காலை திருச்சி மாவட்டம், முக்கொம்பை வந்தடையும் என்று பொதுப்பணித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT