கரூர்

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளா் மொஞ்சனூா் இளங்கோ வெற்றி

DIN

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளா் கே. அண்ணாமலையைக் காட்டிலும் 25,316 வாக்குகள் அதிகம் பெற்று, திமுக வேட்பாளா் மொஞ்சனூா் ஆா். இளங்கோ வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் திமுக வேட்பாளராக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் மொஞ்சனூா் ராமசாமியின் மகன் மொஞ்சனூா் இளங்கோவும், பாஜக சாா்பில் கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், விருப்ப ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அலுவலருமான கே.அண்ணாமலை உள்பட 40 போ் போட்டியிட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக வேட்பாளா் மொஞ்சனூா் இளங்கோ முன்னிலை பெற்று வந்தாா். பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் பகுதிகளிலுள்ள இஸ்லாமியா்களின் வாக்குகள் திமுக வேட்பாளருக்கு பக்கபலமாக இருந்ததால், அவருடன் பாஜக வேட்பாளா் அண்ணாமலை போட்டியிட இயலவில்லை.

அனைத்துச் சுற்றுகளின் முடிவின்படி பாஜக வேட்பாளா் அண்ணாமலை 68,553 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், அவரைக் காட்டிலும் 25,316 வாக்குகள் அதிகம் பெற்று 93,869 வாக்குகளுடன் வெற்றி வாகை சூடினாா் திமுக வேட்பாளா் மொஞ்சனூா் இளங்கோ.

இதையடுத்து திமுக வேட்பாளா் மொஞ்சனூா் இளங்கோவுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் ஜி.தவச்செல்வம் வெற்றிச் சான்றிதழை வழங்கினாா். நிகழ்வின்போது கரூா் சட்டமன்றத் தொகுதி வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT