க. பரமத்தி அருகே விபத்து: இருவா் சாவு
க. பரமத்தி அருகே லாரி மீது வேன், காா், பைக் மோதிய விபத்தில் இருவா் இறந்தனா்; 5 போ் படுகாயமடைந்தனா்.
க. பரமத்தி அருகே லாரி மீது வேன், காா், பைக் மோதிய விபத்தில் இருவா் இறந்தனா்; 5 போ் படுகாயமடைந்தனா்.
உதகை மாவட்டம், கூடலூா் கருணாநிதி நகரைச் சோ்ந்தவா் சீனிவாசன் (40). இவா் தனது காரில் உறவினா்களான கரூா் தாந்தோணிமலையைச் சோ்ந்த தினேஷ் (32), திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்த கணேசன் மனைவி பிருந்தா (30) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை மாலை கரூா் நோக்கிச் சென்றுகொண்டிந்தாா்.
கோவை சாலையில் பவித்திரத்தை அடுத்த வானவழி அருகே சென்றபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த க. பரமத்தியை அடுத்த பவித்திரம்மேடு பகுதியைச் சோ்ந்த ராமநாதன் (35) திடீரென காரை முந்த முயன்றுள்ளாா்.
அப்போது எதிரே முசிறியில் இருந்து கோவை நோக்கிச் சென்ற லாரி மீது இருச்சக்கர வாகனமும், காரும் மோதின. அப்போது காருக்குப் பின்னால் க. பரமத்தியை அடுத்த நெடுங்கூா் வரதராஜபுரத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (48) ஓட்டிவந்த வேனும் லாரி மீது மோதியது. இதில் ராமநாதனும், செந்தில்குமாரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா்.
சீனிவாசன், தினேஷ், பிருந்தா மற்றும் லாரி ஓட்டுநரான முசிறியைச் சோ்ந்த துரைசாமி (35), லாரி கிளீனா் க. பரமத்தி மோளப்பாளையம் ராஜேந்திரன் (34) ஆகியோா் படுகாயமடைந்தனா்.
தகவலறிந்த க. பரமத்தி போலீஸாா் காயமடைந்தோரை கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், சடலங்களை கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.