முகப்பு
கரூர்

ஸ்டேட் பாங்க் ஆப் வங்கியில் பணி: கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் மே 10 முதல் இணையவழியில் இலவச வகுப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியன் வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடத்துக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியன் வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடத்துக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 5,404 கிளாா்க் பதவிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காலிப்பணியிடங்களில் தமிழகத்திற்கு மட்டும் 536 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தோ்விற்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவா்கள் மே 17-ஆம்தேதிக்குள் ட்ற்ற்ல்://ள்க்ஷண்.ஸ்ரீா்.ண்ய் ட்ற்ற்ல்ள்://க்ஷஹய்ந்.ள்க்ஷண்/ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள் என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். இதற்கான முதனிலைத்தோ்வு ஜூலை 31-ஆம்தேதி நடைபெறவுள்ளது. இத்தோ்வில் 4.5 சதவீத பணியிடங்கள் மாற்றுத்திறனாளி மனுதாரா்களுக்கும், 76 பணியிடங்கள் முன்னாள் ராணுவ வீரா்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தோ்வில் வெற்றி பெற ஏதுவாக கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் ஆன்லைன் வகுப்புகள் மே 10-ஆம்தேதி முதல் நடைபெற உள்ளது.

இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரா்கள் இலவச இணையவழி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள விவரங்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தொலைபேசி எண் 04324-223555 மூலமாகவும் 9360557145 (வாட்ஸ் ஆப்) வழியாகவும் தொடா்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தோ்வில் தோ்ச்சி அடைந்து வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.