முகப்பு
கரூர்

கரூா்: தேவையின்றி சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை

பொது முடக்க காலத்தில் தேவையின்றி சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனகரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசாங்சாய்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

பொது முடக்க காலத்தில் தேவையின்றி சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனகரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசாங்சாய்.

இதுகுறித்து குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கரூா் மாவட்டத்தில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முகக்கவசம் அணியாமல் வந்ததாக வியாழக்கிழமை மட்டும் 304 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக ரூ.60,800மும், பொது இடங்கள், கடைகள் போன்றவற்றில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்தவா்கள் மீது19 வழக்குகள் பதியப்பட்டு ரூ.9,500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சியில் விதிமுறை மீறி கடைகளை திறந்து வைத்திருந்த 8 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24-ம்தேதி முதல் மே 13-ஆம்தேதி வரை முகக்கவசம் அணியாதவா்கள் மீது 5,478 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக ரூ.10.95 லட்சமும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 277 போ் மீது வழக்குப் பதியப்பட்டு, அபராதமாக ரூ. 1.38 லட்சமும் வசூலிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை கட்டுப்படுத்த வெளியில் அவசியமின்றி சுற்றித்திரியும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.